கத்திரிக்காயை யாரெல்லம் தவிர்க்க வேண்டும்
கத்திரிக்காயில் வைட்டமின் ஏ, பி,சி,கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் நார்ச்சத்து என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
அரிப்பு, சரும அலர்ஜி, கண் எரிச்சல் மற்றும் கண்களில் ஏதேனும் பிரச்சனை உள்ளவர்கள் சருமம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் சுத்தரிக்காயை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கத்தரிக்காயில் உள்ள ஆக்சலேட்டுகள் சிறுநீரக கல் பிரச்சனையை மோசமாக்கும் என்பதால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
கத்திரிக்காயில் இயல்பாகவே கருச்சிதைவை ஏற்படுத்தும் பண்பு உள்ளதால் கருவுற்ற பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி சாப்பிடுவது நல்லது.
கத்தரிக்காயை அதிகம் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறு, நெஞ்சு எரிச்சல் வாயு பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அளவாகசாப்பிடுவது நல்லதுசர்க்கரை நோய், நுரையீரல் பிரச்சனை மற்றும் ஞாபக சக்திகுறைவாக உள்ளவர்கள் கத்தரிக்காயை உணவில் தாராளமாகஎடுத்துக்கொள்ளலாம்.
0
Leave a Reply